search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானதி சீனிவாசன்
    X
    வானதி சீனிவாசன்

    பிறப்பின் அடிப்படையில் எங்கள் கட்சியில் யாருக்கும் பதவி வழங்கவில்லை- வானதி சீனிவாசன்

    பிறப்பின் அடிப்படையில் எங்கள் கட்சியில் யாருக்கும் பதவி வழங்கவில்லை என்று வானதி சீனிவாசன் கூறினார்.
    சென்னை:

    பா.ஜனதாவின் தேசிய மகளிர் அணி தலைவராக பொறுப்பேற்ற வானதி சீனிவாசன் தமிழக பா.ஜனதா அலுவலகமான கமலாலயத்துக்கு நேற்று வந்தார். அவருக்கு மகளிர் அணி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு ஆளுயர மாலை, மலர் கிரீடம் அணிவித்து, வீரவாள், வெற்றிவேல் பரிசளிக்கப்பட்டது. மாநில தலைவர் எல்.முருகன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

    முன்னதாக வானதி சீனிவாசனுக்கு சென்னை விமான நிலையத்திலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் மேளதாளம் முழங்க பா.ஜனதா அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

    பின்னர் வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேசிய பா.ஜனதா மகளிர் அணி தலைவர் பதவியை ஒரு மிகப்பெரிய பொறுப்பாக உணர்கிறேன். இந்தியா முழுவதும் கட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு காரியங்களை செய்ய வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு. அதிலும் மகளிர் அணி என்பது பா.ஜனதா கட்சியில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளிலேயே 33 சதவீதம் இடஒதுக்கீட்டை கட்சியில் பின்பற்றக்கூடிய ஒரே கட்சி பா.ஜனதா கட்சி தான்.

    மற்ற மாநிலங்களை விட அதிகமான பெண் அரசியல் ஆளுமைகள் இருப்பது தமிழகத்தில்தான். அது தி.மு.க.வாகவும் இருக்கலாம், தே.மு.தி.க.வாகவும் இருக்கலாம். பா.ஜனதாவிலும், சாதாரணமாக கட்சியில் உழைப்பவர்கள் தலைவர் ஆகலாம். பெண் ஆளுமை, ஆண் ஆளுமை என்று அரசியலில் வித்தியாசப்படுத்தி பார்க்க வேண்டியது இல்லை.

    பிறப்பின் அடிப்படையில் முக்கியத்துவம் கொடுப்பதால்தான் மனு தர்மத்தை எதிர்த்து போராடுவதாக திருமாவளவன் கூறுகிறார். பிறப்பின் அடிப்படையில் எங்கள் கட்சியில் யாருக்கும் பதவி வழங்கவில்லை. பிறப்பின் அடிப்படையில் பதவி கொடுப்பது தி.மு.க.வில் தான். பிறப்பின் அடிப்படையில் இல்லாமல் தி.மு.க.வின் இளைஞர் அணி செயலாளர் எப்படி வந்தார்? எனவே, மனு தர்மத்துக்கு எதிராக திருமாவளவன் போராட்டம் நடத்த வேண்டும் என்றால் அறிவாலயத்தில் சென்று நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×