search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மபுரி அரசு கல்லூரியில் நடைபெற்ற இணையவழி யோகா கருத்தரங்கு
    X
    தர்மபுரி அரசு கல்லூரியில் நடைபெற்ற இணையவழி யோகா கருத்தரங்கு

    தர்மபுரி அரசு கல்லூரியில் இணையவழி யோகா கருத்தரங்கு

    தர்மபுரி அரசு கலைக்கல்லூரி உடற்கல்வியியல் துறை சார்பில் தேசிய அளவிலான இணையவழி யோகா கருத்தரங்கு நடைபெற்றது.
    தர்மபுரி:

    தர்மபுரி அரசு கலைக்கல்லூரி உடற்கல்வியியல் துறை சார்பில் தேசிய அளவிலான இணையவழி யோகா கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கை கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன் தொடங்கி வைத்தார். கல்லூரி உடற்கல்வி இயக்குனர் பாலமுருகன் வரவேற்றார். உடற்கல்வி இயக்குனர்கள் பிரசாந்த், ராஜம் ஆகியோர் நோய்களுக்கு மூலகாரணமான மனதை சீரமைக்க யோகா பயிற்சிகள் பயன்படும் முறை குறித்து விளக்கி பேசினார்கள்.

    யோகா பயிற்சி மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து கருத்தரங்கில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மூச்சு பயிற்சி, பிராணயாமம் ஆகியவை குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

    இந்த கருத்தரங்கில் இணையதளம் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த யோகா நிபுணர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் குமார், சுர்ஜித் குமார் மற்றும் துறை பணியாளர்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×