என் மலர்

  செய்திகள்

  வெங்காயம் திருட்டு
  X
  வெங்காயம் திருட்டு

  எருமப்பட்டி அருகே 20 மூட்டை வெங்காயம் திருட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எருமப்பட்டி அருகே 20 மூட்டை வெங்காயம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  எருமப்பட்டி:

  எருமப்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட முட்டாஞ்செட்டி பகுதியை சேர்ந்தவர் சித்தா கவுண்டர். இவருடைய மகன் ராமசாமி (வயது 47). இவருக்கு சொந்தமாக தெற்குமேடு பகுதியில் 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இங்கு வெங்காயம் சாகுபடி செய்த அவர் 40 மூட்டை வெங்காயத்தை பட்டறை கட்டி தோட்டத்திலேயே வைத்திருந்தார்.

  இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது 20 மூட்டை வெங்காயம் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து அவர் எருமப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பெயரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். திருட்டு போன வெங்காயத்தின் மதிப்பு சுமார் ரூ.75,000 இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
  Next Story
  ×