search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்டேலுக்கு மரியாதை செலுத்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
    X
    பட்டேலுக்கு மரியாதை செலுத்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

    பட்டேல் பிறந்தநாள், சகாயம் ஐ.ஏ.எஸ். விருப்ப ஓய்வு, 5 மாவட்டங்களில் கனமழை உள்ளிட்ட முக்கிய செய்திகள்

    சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள், ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம், 5 மாவட்டங்களில் கனமழை உள்ளிட்ட முக்கிய செய்திகளை பார்ப்போம்.

    * சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர். குஜராத்தில் உள்ள பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

    * முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரியங்கா காந்தி மலரஞ்சலி செலுத்தினார்.

    * ஒடிசா மாநிலத்தில் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து கல்வி நிறுவனங்களும் நவம்பர் 30ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    * தனிநபர் வரி செலுத்துவோர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    * இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 81 லட்சத்தை கடந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 91.34 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 5.82 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

    * சிறப்பாக ஆளப்படும் மாநிலங்கள் குறித்து இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கனின் தொண்டு நிறுவனம் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் கேரளா முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளது.

    * புதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய ‘இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபாய் பட்டேல் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.

    * தமிழக அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற சகாயம் ஐ.ஏ.எஸ். விண்ணப்பித்துள்ளார்.

    * தமிழகத்தில் மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    * அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றியாளர் என ரஷ்ய விலங்கியல் பூங்காவில் உள்ள கரடி மற்றும் புலிகள் மூலம் கணிப்பு நடத்தப்பட்டது. இந்த விலங்குகள் ஒரே மாதிரியாக ஜோ பிடன் வெற்றி பெறுவார் என கணித்துள்ளன. 

    * துருக்கி நிலநடுக்கத்திற்கு பின் 196 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு 22 ஆக உயர்ந்துள்ளது.

    * 2021-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டோனியே நீடித்தால் ஆச்சரியமில்லை என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

    * திருமண விழாவில் நண்பருக்கு கொரோனா தொற்று என்று பேனர் வைத்து அஜித் ரசிகர்கள் விழா கொண்டாடி இருக்கிறார்கள். இந்த திருமண பேனர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    Next Story
    ×