search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயக்குமார்
    X
    ஜெயக்குமார்

    7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் திமுக எந்த வகையிலும் சொந்தம் கொண்டாட முடியாது: ஜெயக்குமார்

    7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை கொண்டு வந்தது முழுக்க முழுக்க அதிமுக-தான் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
    மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களால் வெற்றி பெற முடியவில்லை. இதனால் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை தமிழக அரசு கொண்டு வந்தது. சட்டமாக கொண்டு வந்து சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    சுமார் 45 நாட்கள் இழுத்தடித்து இன்று ஒப்புதல் வழங்கினார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்தார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார் சென்றிருந்தார்.

    சுமார 45 நிமிடம் இந்த சந்திப்பு நடைபெற்றது. அதன்பின் ஜெயக்குமார் ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ‘‘உள்ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்ததற்கு ஆளுநருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார்.

    கடந்த 9 ஆண்டுகளில் அதிமுக 3050 மருத்துவ இடங்களை உருவாக்கியுள்ளது. திமுக ஐந்து ஆண்டுகளில் 300 இடங்களைத்தான் உருவாக்கியது. 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வேண்டும் என திமுக தனித்தீர்மானம் கொண்டு வந்ததா? உள்ஒதுக்கீட்டை கொண்டு வந்தது முழுக்க முழுக்க அதிமுக-தான். திமுக எந்த வகையிலும் சொந்தம் கொண்டாட முடியாது.

    மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வை முடிவை மருத்துவ சுகாதாரத்துறை விரைவில் அறிவிக்கும்’’ என்றார்.
    Next Story
    ×