search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுசேமிப்பு வசூலில் சாதனை புரிந்தவர்களுக்கு கலெக்டர் சாந்தா பரிசு மற்றும் கேடயத்தை வழங்கியபோது எடுத்த படம்.
    X
    சிறுசேமிப்பு வசூலில் சாதனை புரிந்தவர்களுக்கு கலெக்டர் சாந்தா பரிசு மற்றும் கேடயத்தை வழங்கியபோது எடுத்த படம்.

    சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதால் எதிர்கால வாழ்க்கைக்கு நிச்சயம் உதவும்- கலெக்டர் சாந்தா பேச்சு

    சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதால் எதிர்கால வாழ்க்கைக்கு நிச்சயம் உதவும் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா கூறினார்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறு சேமிப்பு துறையின் சார்பில் மாவட்ட அளவில் சிறுசேமிப்பு வசூலில் சாதனை புரிந்தவர்களுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி, மகளிர் மற்றும் நிலை முகவர்களுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதால் அத்தொகை எதிர்கால வாழ்க்கைக்கு நிச்சயம் உதவும். மேலும் அரசின் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதற்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் பெரிதும் பயன்படும்.

    இன்றைய சேமிப்பு நாளைய பாதுகாப்பு என்பதால் பெற்றோர்கள் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை தொடர்ந்து சேமிக்க வேண்டும். தங்கள் பிள்ளைகளுக்கும் சிறுவயது முதலே சேமிப்பின் அவசியத்தை உணர்த்திட வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் கூறினார்.

    இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சிறு சேமிப்பு) விஜயலெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×