search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    சுருளக்கோடு பகுதியில் 50.8 மி.மீ. மழை பதிவு

    குமரி மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக சுருளக்கோடு பகுதியில் 50.8 மி.மீ. மழை பதிவாகியது.
    நாகர்கோவில்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த மழையுடன் மேலடுக்கு சுழற்சியும் சேர்ந்துள்ளதால் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மதியம் மற்றும் மாலையில் மழை பெய்து வருகிறது. இந்த மழை நேற்று முன்தினமும் தொடர்ந்தது. ஆனால் நேற்று நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை இல்லை. கடுமையான வெயில் இருந்தது.நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டப் பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-

    பெருஞ்சாணி- 27.4, புத்தன் அணை- 26.6, சிற்றார் 2- 5, மாம்பழத்துறையாறு- 3, பூதப்பாண்டி- 7.6, கன்னிமார்- 1.8, கொட்டாரம்- 3.8, மயிலாடி- 9.2, நாகர்கோவில்- 28.2, சுருளக்கோடு- 50.8, பாலமோர்- 8.4, ஆரல்வாய்மொழி- 20, அடையாமடை- 29, ஆனைக்கிடங்கு-5 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது. இதில் அதிகபட்சமாக சுருளக்கோடு பகுதியில் 50.8 மி.மீ. அளவுக்கு மழை பெய்திருந்தது.

    மலையோர பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று 534 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 720 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பெருஞ்சாணி அணைக்கு 38 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 450 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
    Next Story
    ×