search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திவாகரன்
    X
    திவாகரன்

    வருகின்ற பொதுத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற வாய்ப்பு- திவாகரன்

    வருகின்ற பொதுத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக மதுரையில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறினார்.
    மதுரை:

    சசிகலாவின் சகோதரரும், அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளருமான திவாகரன் நேற்று மதுரை வந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கொரோனா சூழலை மத்திய, மாநில அரசுகள் வெளிப்படையாக கையாண்டிருந்தால் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தி இருக்கலாம். கல்வித்துறையில் உரிய நடைமுறையை தமிழக அரசு ஏற்படுத்தவில்லை. அனைத்து கட்சி கூட்டம் கூட்டி கல்வி நிறுவனங்கள் திறப்பு குறித்து வெளிப்படையாக முடிவு எடுக்க வேண்டும்.

    ஸ்டாலினை பாராட்டியதால் தி.மு.க.வில் இணைய போவதாக கூறினர்; அது உண்மையல்ல. சசிகலாவிற்கு தண்டனை காலம் முடிவடைந்துவிட்டது. விரைவில் வெளியே வருவார்கள். சசிகலாவை முதல்-அமைச்சராக பதவி ஏற்க வேண்டாம் என வலியுறுத்தினேன். ஜெயலலிதா இறந்தவுடன் 3 பேர் முதல்வராக வேண்டும் என முயன்றார்கள்.

    ஓ.பி.எஸ்.சை முதல்-அமைச்சராக அறிவிக்க வேண்டும் என ஆலோசனை கூறினேன். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் சசிகலா முதல்-அமைச்சராக வேண்டும் என விரும்பினார். ஆனால் நாங்கள் தான் எடப்பாடியை முதல்-அமைச்சராக்கினோம். அவர் நான்கு ஆண்டு ஆட்சியை சிறப்பாக கையாண்டுள்ளார்.

    சசிகலா குறித்து ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகியோர் இதுவரை எந்த கருத்தும் சொல்லவில்லை. எனவே சசிகலா குறித்து விமர்சிப்பவர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்காது. மத்திய அரசால் தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது. இங்கு வடமாநிலத்தவர்கள் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. தமிழகத்தில் விவசாய பிரச்சினை பெரிதாக உள்ளது.

    திருமாவளவன் பெண்களை மதிக்கக்கூடியவர். என்னுடைய அரசியல் பார்வை எப்போதும் தவறாகாது. இளைஞர்களுக்கான திட்டங்களை அண்ணா திராவிடர் கழகம் வைத்துள்ளது. வருகின்ற பொதுத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற வாய்ப்புள்ளது. டி.டி.வி. தினகரனே ஒரு சிலிப்பர் செல் தான். அவருக்கு சிலிப்பர் செல் தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×