
தமிழகத்தில் இன்று 2 ஆயிரத்து 522 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 14 ஆயிரத்து 235 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 27 ஆயிரத்து 734 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 4 ஆயிரத்து 029 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 75 ஆயிரத்து 518 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 983 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-
அரியலூர் - 78
செங்கல்பட்டு - 1,203
சென்னை - 8,096
கோவை - 3,590
கடலூர் - 708
தர்மபுரி - 415
திண்டுக்கல் - 228
ஈரோடு - 772
கள்ளக்குறிச்சி - 240
காஞ்சிபுரம் - 449
கன்னியாகுமரி - 566
கரூர் - 279
கிருஷ்ணகிரி - 461
மதுரை - 597
நாகை - 350
நாமக்கல் - 709
நீலகிரி - 296
பெரம்பலூர் - 71
புதுக்கோட்டை - 216
ராமநாதபுரம் - 116
ராணிப்பேட்டை - 265
சேலம் - 1,778
சிவகங்கை - 131
தென்காசி - 103
தஞ்சாவூர் - 331
தேனி - 106
திருப்பத்தூர் - 295
திருவள்ளூர் - 1,166
திருவண்ணாமலை - 463
திருவாரூர் - 390
தூத்துக்குடி - 493
திருநெல்வேலி - 290
திருப்பூர் - 978
திருச்சி - 474
வேலூர் - 438
விழுப்புரம் - 437
விருதுநகர் - 194
விமானநிலைய கண்காணிப்பு
வெளிநாடு - 2
உள்நாடு - 0
ரெயில் நிலைய கண்காணிப்பு - 0
மொத்தம் - 27,734