என் மலர்
செய்திகள்
X
ஓபிசி இடஒதுக்கீடு வழக்கு தீர்ப்பு, பெரிய கோவிலில் தமிழில் வழிபாடு, அமைச்சர் உடல்நிலை பின்னடைவு உள்ளிட்ட முக்கிய செய்திகள்
Byமாலை மலர்26 Oct 2020 2:23 PM IST (Updated: 26 Oct 2020 4:08 PM IST)
ஓபிசி இட ஒதுக்கீடு, அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு, சிஎஸ்கே ரசிகர்களுக்காக டோனி மனைவி வெளியிட்ட கவிதை உள்ளிட்ட முக்கிய செய்திகளை பார்ப்போம்.
* மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டு அமல்படுத்த உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
* திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் செய்வதற்கான டோக்கன் விநியோகம் இன்று தொடங்கியது. தினமும் 3 ஆயிரம் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன் வழங்கப்படுகிறது. அலிபிரியில் இன்று டோக்கன் பெறும் பக்தர்கள் நாளை ஏழுமலையானை இலவசமாக தரிசனம் செய்யலாம்.
* நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு பதில் அரசுகளை கவிழ்ப்பதில் பாஜக தொடர்ந்து ஆர்வமுடன் உள்ளது என மகாராஷ்டிர முதல் மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
* சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுடன் போர் செய்வது பற்றி பிரதமர் மோடி முடிவு செய்து வைத்துள்ளார் என உ.பி. பா.ஜ.க. தலைவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
* நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி திலிப் ரேக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 79 லட்சத்தை கடந்துள்ளது. 24 மணி நேரத்தில் புதிதாக 45,149 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 71.37 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
* மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவு காரணமாக, தேசிய நெடுஞ்சாலையில் நான்காவது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
* கேரள மாநிலத்தில் கொரோனாவால் மரண மடைந்தவர்களின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்க உறவினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றுசுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
* மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
* மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது சதயவிழாவையொட்டி, தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு முதல் முறையாக தமிழில் தேவாரம், திருமுறை பாடி வழிபாடு நடந்தது.
* தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு உள்ளதால் 24 மணி நேரமும் டாக்டர்கள் குழு கண்காணித்து வருகிறது.
* 7.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசு, உண்மைகளை மறைத்து மாணவர்களை ஏமாற்றுவதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
* நமீபியா நாட்டின் கடற்கரைகளில் சீல்கள் கொத்துக்கொத்தாக இறந்து கிடந்தது விலங்கியல் ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
* இங்கிலாந்து கால்வாய் பகுதியில் எண்ணெய் கப்பல் கடத்தல் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
* ஸ்பெயின் நாட்டில் கொரோனா இரண்டாவது அலை அதிகரிக்க தொடங்கியதால், அந்நாட்டில் தேசிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அவசரகால நிலை மே மாத தொடக்கம் வரை நீடிக்கும் என்று பிரதமர் பெட்ரோ சன்செஸ் தெரிவித்தார்.
* சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் முறையாக ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறியது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது. இதனையடுத்து ரசிகர்களுக்காக, உணர்வுப்பூர்வமான கவிதை ஒன்றை கேப்டன் டோனியின் மனைவி சாக்சி வெளியிட்டுள்ளார்.
* ஐபிஎல் பிளே-ஆப் சுற்றுகள் மற்றும் இறுதிப் போட்டிகள் துபாய் மற்றும் அபு தாபி மைதானங்களில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
* சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் தீபாவளிக்கு முன்பே ரிலீஸ் ஆகிறது. படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ள படக்குழு, படம் தீபாவளி பண்டிகைக்கு 2 நாள் முன்னதாகவே, நவம்பர் 12-ந் தேதி ரிலீஸ் செய்யப்படும் அறிவித்துள்ளது.
Next Story
×
X