search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணாமலை
    X
    அண்ணாமலை

    ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்- அண்ணாமலை பேச்சு

    சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா மிகப் பெரிய அளவில் போட்டியிட உள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவதை தனிமனிதாக நான் வரவேற்கிறேன் என்று பா.ஜ.க. மாநில துணை தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

    காரமடை:

    கோவை மாவட்டம் காரமடையில் பா.ஜனதா கட்சியின் ஒன்றிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜனதா மாநில துணைதலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் கடந்த 53 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் மாறி, மாறி ஆட்சி செய்துள்ளன. ஆனால் இன்னும் ஏழைகள், ஏழைகளாகவே உள்ளனர்.

    கடந்த 6 ஆண்டுகளாக மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு ஒவ்வொரு இந்தியனின் வாழ்க்கை முறையையும் மாற்றி அமைத்து வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ரூ.2.77 லட்சம் மதிப்பில் வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கும் திட்டம் உள்பட 17 சலுகைகளை வழங்கியுள்ளது. இதன் காரணமாக ஏழைகளாக இருந்தவர்கள் நடுத்தர மக்களாக உயர்ந்துள்ளனர். இதுதவிர நடுத்தர வர்க்கத்தினர் தொழில் தொடங்குவதற்கான கடன் வசதியையும் மத்திய அரசு செய்து கொடுத்துள்ளது. இந்த திட்டங்களில் எந்தவித ஊழலும் நடப்பதில்லை.

    இத்தனை ஆண்டுகள் ஆண்ட திராவிட கட்சிகள், குடும்ப அரசியலையும், குறுநில மன்னர்களையும் மட்டுமே உருவாக்கியுள்ளது. ஆனால் பா.ஜனதா நேர்மை, ஆன்மீகம், தேசியம் கலந்து பாதையை உருவாக்கி கொடுத்துள்ளது.

    திருமாவளவன் தனது அரசியல் சுயலாபத்திற்காகவே இந்து பெண்கள், இந்து தர்மம் குறித்து பேசியுள்ளார். இப்படி இந்துக்களையும், இந்துமதத்தையும் இழிவுபடுத்தி பேசுபவர்களை வருகிற தேர்தலில் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா மிகப் பெரிய அளவில் போட்டியிட உள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவதை தனிமனிதாக நான் வரவேற்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×