search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தினேஷ் குண்டுராவ்
    X
    தினேஷ் குண்டுராவ்

    பாரதிய ஜனதாவின் ஊழியர்களாக கவர்னர்கள் செயல்படுகிறார்கள்- தினேஷ் குண்டுராவ்

    பாரதிய ஜனதாவின் ஊழியர்களாக கவர்னர்கள் செயல்படுகிறார்கள் என்று தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளார்.

    குழித்துறை:

    குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் வாக்குச் சாவடி பிரதிநிதிகள் கூட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த நடைகாவுவில் நடந்தது.

    இக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது தினேஷ் குண்டு ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டிற்கு அனுமதி வழங்க கவர்னர் தாமதம் செய்வதை தி.மு.க. கூட்டணி கட்சிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகிறது. தமிழக அரசு மத்திய அரசின் பொம்மையாக செயல்படுகிறது.

    இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான கவர்னர்கள் பாரதிய ஜனதா கட்சியின் ஊழியர்களாகவே செயல்படுகிறார்கள். இவர்களிடம் இருந்து என்ன நீதியை எதிர்பார்க்க முடியும்.

    ரஜினி-கமல் அரசியல் செயல்பாடு பற்றி கருத்து கூற விரும்பவில்லை.

    பீகார் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது.

    பாரதிய ஜனதா அரசு வருமான வரித்துறையையும், விசாரணை அமைப்புகளையும் பயன்படுத்தி எதிர்க்கட்சியினரை மிரட்டுகின்றனர். தமிழகத்தில் ஏற்கனவே நடந்த சோதனைகள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ஆனது? என்று தெரியவில்லை.

    இந்தியாவில் பொருளாதாரம் சீரழிந்து வருகிறது. இப்படியே சென்றால் நாடு மோசமான நிலைக்கு சென்று விடும். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பேசியதாவது:-

    பாரதிய ஜனதா ஆட்சியில் வளர்ச்சி விகிதம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. இதை எதிர்க்கட்சிகளோ, காங்கிரஸ் கட்சியோ கூறவில்லை. உலக வங்கியும், ரிசர்வ் வங்கியும் கூறுகிறது.

    இந்திய பொருளாதாரத்தை மோடி அரசு சிதைத்து விட்டது. புதிய விவசாய சட்டத்தால் விவசாயிகளுக்கு அவர்கள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு ஆதார விலை கூட கிடைக்காமல் போகும். தமிழக அரசு மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்து வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×