search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருச்சியில் பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

    திருச்சியில் பணம் வைத்து சூதாடிய 7 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டுகள், பணத்தை பறிமுதல் செய்தனர்.
    திருச்சி:

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அனைத்து கடைகளும் மூடப்பட்டன. பஸ், ரெயில், விமான போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டன. இதனால் பலர் வேலை இழந்து தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர். பிழைப்புக்காக பல சாலையோர கடைகள் முளைக்கத் தொடங்கின. பின்னர் சில மாதங்களுக்குப் பிறகு ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்தநிலையில் திருச்சியில் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தவர்களில் சிலர் வருமானத்துக்காக சூதாட்டத்தில் ஈடுபடும் அவலநிலை ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு சூதாட்டத்தில் ஈடுபடுவோர் கையிலிருக்கும் கொஞ்ச காசையும் விட்டுச் செல்வதுதான் வேதனையின் உச்சமாக இருக்கிறது.

    கடந்த சில நாட்களாக திருச்சியில் பணம் வைத்து சூதாடியவர்கள் மீது போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவின் பேரில், போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் 2 தினங்களுக்கு முன்பு எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ரெட்டைமலை பகுதியில் பணம் வைத்து சூதாடிய 13 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்தநிலையில் உறையூர் பெரியசெட்டி தெருவில் ஒரு வீட்டில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக நேற்று முன்தினம் இரவு உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வீட்டில் உறையூர் போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு 7 பேர் அமர்ந்து பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் அவர்கள், அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன் (வயது 40) , ராஜதுரை (68) , பிரான்மலை (36) , பாலாஜி (52), சித்திக் (47), குணசேகரன், ஆனந்தகுமார் என்பது தெரியவந்தது. இவர்கள் மீது உறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோனியாகாந்தி வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தார். மேலும், அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டுகள், ரூ.7,690-ஐ பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×