search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    விழுப்புரத்தில் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 6 பேர் கைது

    விழுப்புரத்தில் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் தெற்கு ரெயில்வே காலனி பகுதியில் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மருது தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 6 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் 6 பேரும், விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்த சவுந்தரராஜன்(வயது 32), சுரேஷ்(36), முத்துகிருஷ்ணன்(26), பண்ருட்டி அருகே வி.ஆண்டிக்குப்பத்தை சேர்ந்த ராகுல் (29), விழுப்புரம் வண்டிமேட்டை சேர்ந்த ராகுல்(21), விழுப்புரம் அருகே ராம்பாக்கத்தை சேர்ந்த ஜெயராஜ்(29) என்பதும், இவர்கள் 6 பேரும் சேர்ந்து கூட்டுக்கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×