search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தஞ்சை மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 33 பேர் கைது

    தஞ்சை மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 33 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதன்படி தஞ்சை நகரில் விளார் ரோடு, பர்மா காலனி, தெற்கு வீதி, தற்காலிக பஸ் நிலையம், உள்பட 6 இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் 6 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து தெற்கு, மேற்கு மற்றும் மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர். இதே போல் மாவட்டம் முழுவதும் மேற்கொண்ட சோதனையில், வல்லம் பகுதியில் ஒருவரையும், ஒரத்தநாடு பகுதியில் 4 பேரையும், பட்டுக்கோட்டை பகுதியில் 2 பேரையும், தஞ்சை புறநகர் பகுதியில் 3 பேரையும், கும்பகோணம் பகுதியில் 6 பேரையும், திருவிடைமருதூர் பகுதியில் 11 பேர் என மாவட்டம் முழுவதும் 33 பேரை போலீசார் கைது செய்தனர் மேலும் அவர்களிடம் இருந்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×