search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 26 பேருக்கு கொரோனா

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 2 லட்சத்து 71 ஆயிரத்து 972 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்த நிலையில் 16 ஆயிரத்து 149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 7 ஆயிரத்து 652 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.

    14 ஆயிரத்து 882 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு முகாமில்4 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 77 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று புதிதாக 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்களை சேர்ந்த 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,175 ஆக உயர்ந்துள்ளது.

    நேற்று 1,625 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 7,652 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கபடவில்லை. தற்போது விருதுநகர் மற்றும் நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மட்டும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் முடிவுகள் தெரிவதற்கு தாமதம் ஏற்படுகிறது.

    கட்டுப்பாட்டு பகுதிகளையும், மாவட்ட நிர்வாகம் 2 பகுதிகளாக குறைந்து விட்ட நிலையில் நோய் பாதிப்பின் உண்மை நிலவரம் மாவட்ட மக்களுக்கு தெரியவாய்ப்பு இல்லாத நிலையே உள்ளது. மாவட்ட நிர்வாகம் மருத்துவ பரிசோதனை முடிவுகளை உடனுக்கு உடன் தெரிவிக்க கூடுதல் மையங்களுக்கு மாதிரிகளை அனுப்பி வைத்து முடிவுகளை அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×