search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரிய வெங்காயம்
    X
    பெரிய வெங்காயம்

    தூத்துக்குடி பண்ணை பசுமை காய்கறி கடைக்கு நாசிக்கிலிருந்து வரும் பெரிய வெங்காயம்

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பண்ணை பசுமை நுகர்வோர் கடைக்கு நாசிக்கிலிருந்து சுமார் 30 டன் பெரிய வெங்காயம் கொண்டு வரப்பட உள்ளது.
    தூத்துக்குடி:

    தமிழகத்தில் வெங்காயம் விலை அதிகரித்து உள்ளது. தூத்துக்குடியில் நேற்று ஒரு கிலோ சிறிய வெங்காயம் ரூ.100 முதல் ரூ.120 வரையும், பெரிய வெங்காயம்(பல்லாரி) ரூ.80-க்கும் விற்பனையானது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    அதே நேரத்தில் தமிழக அரசு பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.45-க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவித்தது. அதன்படி சென்னையில் பெரிய வெங்காயம் விற்பனை தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

    இதற்காக, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் நாசிக்கில் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பண்ணை பசுமை நுகர்வோர் கடைக்கு சுமார் 30 டன் பெரிய வெங்காயம் கொண்டு வரப்பட உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் தூத்துக்குடியில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×