search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குன்னம் பெரிய ஏரியில் டைனோசர் முட்டை போல் காணப்படும் படிமங்கள்
    X
    குன்னம் பெரிய ஏரியில் டைனோசர் முட்டை போல் காணப்படும் படிமங்கள்

    குன்னம் ஏரியில் கண்டெடுக்கப்பட்டவை டைனோசர் முட்டைகளா?- அதிகாரிகள் ஆய்வு

    குன்னம் ஏரியில் கண்டெடுக்கப்பட்டவை டைனோசர் முட்டைகளா? என்று பார்வையிட்டு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பெரிய ஏரியில் கடந்த 21-ந்தேதி வண்டல் மண் எடுத்தபோது டைனோசர் முட்டை போன்று உருண்டை வடிவலான படிமங்கள் கண்டெடுக்கப்பட்டது. அதனை பொதுமக்கள் டைனோசர் முட்டைகளாக இருக்கலாம் என்று சந்தேகித்தனர்.

    இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் டைனோசர் முட்டைகள் கிடைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து டைனோசர் முட்டை போன்று உருண்டை வடிவிலான படிமங்கள் சிலவற்றை குன்னம் தாசில்தார் சின்னத்துரை கைப்பற்றி வருவாய் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தார்.

    இந்த உருண்டை வடிவிலான படிமங்கள் டைனோசர் முட்டையா? என்று பார்வையிட்டு ஆய்வு செய்ய நேற்று திருச்சி, அரியலூர் அருங்காட்சியகங்களில் பணிபுரியும் அதிகாரிகள் வந்தனர். அவர்கள் உருண்டை வடிவிலான படிமங்களை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். பின்னர் படிமங்கள் சிலவற்றை மேல் ஆய்வுக்காக எடுத்து சென்றனர்.
    Next Story
    ×