search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கோவை வாலிபர் கொலையில் ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் கைது

    கோவை வாலிபர் கொலையில் ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    கோவை:

    கோவை தொட்டிப்பாளையம் நேரு வீதியை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (வயது 55). இவருடைய மகன் இளங்கோவன் (27). இவர்களுடைய உறவினர் சவுந்தர் (23). இந்த நிலையில் பாக்கியலட்சுமி அதே பகுதியில் தனது வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தார். அந்த வீட்டில் மைக்கேல் (23) என்ற ஆட்டோ டிரைவர், திருநங்கைகள் ராகிணி, வெண்பா உள்ளிட்டோர் வசித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மைக்கேல், திருநங்கைகள் ராகிணி, வெண்பா ஆகியோர் வீட்டை காலிசெய்துவிட்டனர்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மைக்கேல் பாக்கியலட்சுமியிடம் ஆட்டோவின் ஆர்.சி.புத்தகத்தை கொடுத்து ரூ.38 ஆயிரம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மைக்கேலுக்கும், பாக்கியலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்று மைக்கேல் தனது ஆட்டோவில் திருநங்கைகள் ராகிணி, வெண்பா ஆகியோருடன் பாக்கியலட்சுமி வீட்டிற்கு வந்து வாக்குவாதம் செய்தனர். அப்போது அவர்களுக்கும், பாக்கியலட்சுமி, அவருடைய மகன் இளங்கோவன் இடையே தகராறு ஏற்பட்டது. இதனை அங்கிருந்த சவுந்தர், கிருபாகரன், அருண் ஆகியோர் தடுக்க முயன்றனர். ஆனால் மைக்கேல் மற்றும் திருநங்கைகள் அவர்களையும் சேர்த்து தாக்கினர். இதில், சவுந்தருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதையடுத்து மைக்கேல், மற்றும் திருநங்கைகள் இளங்கோவன், கிருபாகரன், அருண் ஆகியோரை கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் பலத்த காயமடைந்த சவுந்தரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மீதமுள்ள 3 பேரும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர். இதில் சவுந்தர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மைக்கேல், ராகிணி, வென்பா ஆகியோரை தேடி வந்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த 3 பேரையும் போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் சவுந்தரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×