search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் பூ மார்க்கெட்டில் செவ்வந்தி பூ விற்பனை மும்முரமாக நடந்த போது எடுத்த படம்.
    X
    திருப்பூர் பூ மார்க்கெட்டில் செவ்வந்தி பூ விற்பனை மும்முரமாக நடந்த போது எடுத்த படம்.

    திருப்பூர் மார்க்கெட்டில் செவ்வந்தி பூ விலை உயர்வு

    ஆயுதபூஜை பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர தொடங்கியுள்ளது. செவ்வந்தி பூ நேற்று கிலோ ரூ.200-க்கு விற்பனையானது.
    திருப்பூர்:

    திருப்பூர் பல்லடம் ரோடு காட்டன் மார்க்கெட் வளாகத்தில் தற்காலிக பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு சேலம், சத்தியமங்கலம், நாமக்கல், பெங்களூரு, ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சூளகிரி, ஆந்திர மாநிலம் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு வருகின்றன.

    கொரோனா அச்சம் காரணமாக திருப்பூர் பூ மார்க்கெட்டில் பொதுமக்களின் கூட்டம் கடந்த சில வாரங்களாக குறைவாக உள்ளது. இந்த நிலையில் தற்போது ஆயுத பூஜை நெருங்கி வருவதால் பூ மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    கடந்த சில நாட்களாக மல்லிகை பூ கிலோ ரூ.800, முல்லை ரூ.500 ஆகிய விலைகளில் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஆயுத பூஜை பண்டிகைக்கு அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய செவ்வந்தி பூவின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு செவ்வந்தி பூ கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையானது.

    பின்னர் படிப்படியாக கிலோ ரூ.30, ரூ.80 என விற்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று கிலோ 200 ரூபாய்க்கு விற்பனையானது. இதில் சற்று தரம் குறைந்த பூக்கள் கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல் ஒட்டு ரக செவ்வந்தி பூ சில கடைகளில் கிலோ ரூ.300 க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்னும் 2 நாட்களில் இதன் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    மேற்கண்ட தகவலை திருப்பூர் மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் சக்திவேல் தெரிவித்தார்.
    Next Story
    ×