search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி
    X
    பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி

    மோடி பிரச்சாரம்,மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு, சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ஜடேஜா உள்ளிட்ட முக்கிய செய்திகள்

    பிரதமர் மோடி பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளும் தேர்தல் பிரச்சாரம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களை ஊக்கப்படுத்திய ஜடேஜா உள்ளிட்ட முக்கிய செய்திகளை பார்ப்போம்.

    * பீகார் மாநிலத்தில் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரச்சாரத்தை தொடங்கினார். பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடினார். தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் ரத்து செய்யப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை, மீண்டும் கொண்டு வருவதாக எதிர்க்கட்சி கூறுவதாக மோடி குற்றம்சாட்டினார்.

    * கொரோனா வைரஸ் முதியோர்களை வீடுகளிலேயே முடக்கி உள்ள நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் 87 வயது ஹோமியோபதி டாக்டர் ஒருவர், கிராமங்களுக்கே சென்று ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கிறார். 

    * இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 77.61 லட்சமாக உயர்ந்துள்ளது. இவர்களில் 69.48 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரசுக்கு இதுவரை 1.17 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 6.95 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.51 சதவீதமாகவும், குணமடையும் விகிதம் 89.53 சதவீதமாகவும் உள்ளது.

    * புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி மூலம் இன்று அடிக்கல் நாட்டினார்.

    * வெங்காயம் அறுவடை செய்யும் பகுதிகளில் மழை பெய்வதால் விலை உயர்ந்துள்ளதாகவும், ஆனால் இந்த விலை உயர்வு தற்காலிகமானது என்றும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.

    * ‘தமிழகத்தில், திமுக ஆட்சி அமைவதற்கான காலம் நெருங்கி கொண்டிருக்கிறது’ என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    * பண்டிகை நாட்கள் வருவதையொட்டி சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    * திரையரங்குகள் திறக்கப்படும்போது சூழலை பொறுத்து கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

    * எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகளின் அடிப்படையில் அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படுகிறது.

    * அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் இடையிலான நேரடி விவாதத்தின்போது பேசிய டிரம்ப், இந்தியாவில் காற்று மாசுபாடு அதிகரித்திருப்பதாக குற்றம்சாட்டினார்.

    * அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சீனாவில் ரகசிய வங்கிக்கணக்குகள் இருப்பதாக நேரடி விவாதத்தின்போது ஜோ பிடன் குற்றம்சாட்டி உள்ளார்.

    * ரஷியாவின் கொரோனா தடுப்பூசியான ஸ்பூட்னிக்-5 தடுப்பூசியை இந்தியாவில் 100 தன்னார்வலர்களுக்கு செலுத்தி சோதனை செய்யப்பட உள்ளது.

    * ஐபிஎல் தொடரில் மிகவும் பின்தங்கியிருக்கும் சிஎஸ்கே வீரர்களை தட்டியெழுப்பி உற்சாகப்படுத்தும் வகையில் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    * உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி தொடர்களை நடத்த முடியாத சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் அந்த அணிகளுக்கு புள்ளிகளை பிரித்து அளிப்பது குறித்து ஐ.சி.சி. பரிசீலித்து வருகிறது.

    * கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி ரத்து செய்யப்படுவதாக உலக பேட்மிண்டன் சம்மேளனம் அறிவித்துள்ளது.

    * பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனை நடிகை சமந்தா சில வாரங்களுக்கு தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    news headlines, தலைப்புச் செய்திகள்
    Next Story
    ×