search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ஜெயக்குமார்
    X
    அமைச்சர் ஜெயக்குமார்

    7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் கவர்னரை கட்டாயப்படுத்த முடியாது- அமைச்சர் ஜெயக்குமார்

    மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் கவர்னரை கட்டாயப்படுத்த முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.
    சென்னை:

    இந்தியா முழுவதும் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ இடங்கள் நிரப்பப்படுகிறது. தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாகுபடியின்றி அனைத்து தரப்பினரும் ஆதரவளித்தனர். இந்த மசோதா உடனடியாக கவர்னர் மாளிகைக்கு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை இந்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கவில்லை.

    இது தொடர்பாக, தமிழக அமைச்சர்கள் சில நாட்களுக்கு முன்பு கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினர். அதேபோல் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினும் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக்கோரி கவர்னருக்கு கடந்த 21-ந்தேதி கடிதம் எழுதி இருந்தார்.

    இதையடுத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பதில் அளித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் அனுப்பியுள்ள கடிதத்தில் நீட் முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு மசோதா குறித்து அனைத்துக் கோணங்களிலும் கலந்தாலோசனை நடத்தி வருகிறேன். இது குறித்து முடிவு எடுக்க எனக்கு 3 அல்லது 4 வாரங்கள் தேவைப்படுகிறது என்று கூறி இருந்தார்.

    இந்நிலையில் கவர்னர் 4 வாரம் அவகாசம் கேட்டது குறித்த கேள்விக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:

    * 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தரும்படி கையெழுத்திட கவர்னரை கட்டாயப்படுத்த முடியாது.

    * 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு கவர்னர் ஒப்புதல் தந்த பிறகே மருத்துவ கலந்தாய்வு நடைபெறும்.

    * திமுக போராட்டத்தால் மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்தது என கூறி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெயர் எடுக்க பார்க்கிறார்.

    * எதிர்க்கட்சித் தலைவர் கவர்னருக்கு கடிதம் எழுதியதில் எந்த தவறும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×