search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு வந்த உருளைக்கிழங்குகளை தரம் பிரிக்கும் தொழிலாளர்கள்.
    X
    மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு வந்த உருளைக்கிழங்குகளை தரம் பிரிக்கும் தொழிலாளர்கள்.

    மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் உருளைக்கிழங்கு வரத்து அதிகரிப்பு

    மேட்டுப்பாளையம் மார்க்கெட்டிற்கு உருளைக்கிழங்கு வரத்து அதிகரித்தது.
    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேட்டுப்பாளையம் காந்தி மைதானம், நெல்லிதுறை ரோடு, பழைய நகராட்சி அலுவலக வீதி, எல்.எஸ்.புரம் ஆகிய பகுதிகளில் 75-க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் உள்ளன. இந்த மண்டிகளுக்கு நீலகிரி மாவட்டம் கர்நாடகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து உருளைக்கிழங்கு லாரிகளில் வருகிறது. அதேபோல் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் இருந்து தமிழகத்தின் பிறபகுதிகள் மற்றும் கேரளாவுக்கு உருளைக்கிழங்கு லாரி மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு உருளைக்கிழங்கு வரத்து குறைந்து காணப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மார்க்கெட்டுக்கு உரு ளைக்கிழங்குஅதிக அளவு விற்பனைக்கு வந்தது. வரத்து அதிகரிப்பு காரணமாக விலையில் சற்று சரிந்து காணப்பட்டது.

    நீலகிரி மாவட்ட உருளைக்கிழங்கு 45 கிலோ மூட்டை ரூ.1800-ல் இருந்து ரூ.2300-க்கும், திம்பம் உருளைக்கிழங்கு 45 கிலோ ரூ.1500-ல் இருந்து ரூ.2100-க்கும், கோலார் உருளைக்கிழங்கு 45 கிலோ ரூ.1900-ல் இருந்து ரூ.2200-க்கும், குஜராத் உருளைக்கிழங்கு 45 கிலோ ரூ.1750-க்கும், ஆக்ரா உருளைக்கிழங்கு ரூ.1800-ல் இருந்து ரூ.1900-க்கும் நைனிடால் உருளைக்கிழங்கு 45 கிலோ ரூ.1700-க்கும், ஆசன் உருளைக்கிழங்கு 45 கிலோ ரூ.2100-க்கும் விற்பனையானது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

    உருளைக்கிழங்கு பயிரிடும் பகுதிகளில் பெய்யும் மழை அளவை பொருத்து மேட்டுப்பாளையம் மார்க்கெட்டிற்கு உருளைக்கிழங்கு வரத்து குறைந்தும் அதிகரித்தும் காணப்படும். நீலகிரி மாவட்டத்தில் உருளைக்கிழங்கு சீசன் தொடங்கும் போது மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் இருந்து இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய பகுதிகளுக்கு கப்பல்கள் மூலம் உருளைக்கிழங்கு அனுப்பி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×