search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இல. கணேசன்
    X
    இல. கணேசன்

    தேர்தல் நேரத்தில் சூழலுக்கு ஏற்ப கூட்டணி அமையும்- இல. கணேசன்

    தேர்தல் நேரத்தில் சூழலுக்கு ஏற்ப கூட்டணி அமையும், நிச்சயம் நல்ல முடிவாக இருக்கும் என்று பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கூறியுள்ளார்.
    பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கூறியதாவது, 

    தமிழக சட்டசபை தேர்தல் நேரத்தில் சூழலுக்கு ஏற்ப கூட்டணி அமையும். நிச்சயம் நல்ல முடிவாக இருக்கும். தேசிய அளவில் பாஜக கூட்டணியில் அதிமுக உள்ளது. எங்களுக்கு முழு ஆதரவு தருகிறார்கள். 

    அதிமுகவை பொறுத்தவரை முதல்வர் வேட்பாளரை அறிவித்து விட்டார்கள். அதில் எந்தக் குழப்பமும் இல்லை. பீகாரில் பாஜகவிற்கு அதிக வேட்பாளர்கள் இருந்தாலும் நிதிஷ்மார்தான் முதல்வர் என அமித்ஷா கூறியிருக்கிறார். 

    பீகார் போன்று உரிய நேரத்தில் நாங்கள் எடுக்கும் முடிவில் உறுதியாக இருப்போம் என்று கூறியுள்ளார்.
    Next Story
    ×