search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் திரியும் நாய்கள்.
    X
    ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் திரியும் நாய்கள்.

    ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நாய்கள் தொல்லை- பொதுமக்கள் அவதி

    ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு தினமும் எண்ணற்ற பேர் வருகின்றனர். இங்குள்ள மகப்பேறு வளாக பகுதியில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது.

    அதிலும் குறிப்பாக இரவு நேரத்தில் இங்கு நாய்கள் சர்வ சாதாரணமாக சுற்றி திரிகின்றன. இதனால் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

    இதுகுறித்து மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் கண்மணி காதர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு ஒன்று அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு பல்வேறு கிராமங்களில் இருந்து எண்ணற்ற பேர் வருகின்றனர். இந்தநிலையில் இங்கு நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது.

    இந்த பகுதியில் தான் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் தூங்குகின்றனர்.

    அவ்வாறு தூங்கும் போது நாய்கள் எதுவும் கடித்து விடுமோ என அச்சப்படுகின்றனர். எனவே பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×