search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய, மாநில அரசுகள் தோற்றுவிட்டன - முக ஸ்டாலின்

    புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய, மாநில அரசுகள் தோற்றுவிட்டன என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    தென்காசி:

    தென்காசி மாவட்ட இளைஞர்களுக்காக இலவச வேலைவாய்ப்பு முகாம் மூலமாக மூவாயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நிகழ்ச்சியை காணொலி காட்சி மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். 50 முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறும் வகையில் இந்த முகாம் நடைபெற்றது.

    இதில் பேசிய ஸ்டாலின், வேலைவாய்ப்பு பஞ்சம் உள்ளதால் தான், வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் பணி வழங்கப்படுவதாக கூறினார். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதில், மத்திய, மாநில அரசுகள் தோற்றுவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார். அனைவரும் படிக்க வேண்டும், கல்வி, வேலைவாய்ப்பில் ஆண், பெண் பேதம் இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டது தான் திராவிட இயக்கம் என்று ஸ்டாலின் குறிப்பிட்டார்.

    தமிழகத்தில் அதிக கல்லூரிகளை திறந்து வைத்தவர் திமுக தலைவர் கருணாநிதி என்று அவர் கூறினார். மேலும் தமிழக அரசில் ஐ.டி. துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை உருவாக்கிவர் கருணாநிதி என்று கூறிய ஸ்டாலின், திமுக ஆட்சியில் தான் 620 ஐ.டி. நிறுவனங்கள் உருவாக்கப்பட்டது என்றும் தெரிவித்தார். கருணாநிதி அரசு நீடித்திருந்தால் வேறு பாதை பிறந்திருக்கும் என்று கூறிய அவர், அத்தகைய கருணாநிதி அரசு அமையப்போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று தெரிவித்தார்.
    Next Story
    ×