search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மூங்கில்துறைப்பட்டில் கடையின் பூட்டை உடைத்து 60 செல்போன்கள் திருட்டு

    மூங்கில்துறைப்பட்டில் கடையின் பூட்டை உடைத்து 60 செல்போன்கள் திருட்டப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மூங்கில்துறைப்பட்டு:

    மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள கானாங்காடு கிராமத்தை சேர்ந்த மார்க் மகன் ஸ்டீபன்(வயது 28). இவர் மூங்கில்துறைப்பட்டில் செல்போன் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்ததும் ஸ்டீபன் கடையை பூட்டி விட்டு சென்றார் பின்னர் நேற்று காலையில் கடையை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

    உள்ளே சென்று பார்த்தபோது 60 செல்போன்களை காணவில்லை. இரவு நேரத்தில் யாரோ மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து செல்போன்களை திருடிச்சென்றுள்ளனர். திருடுபோன செல்போன்களின் மதிப்பு ரூ.60 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து மூங்கில்துறைப்பட்டு போலீஸ் நிலையத்தில் ஸ்டீபன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிவுசெய்து செல்போன்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார். 

    ஏற்கனவே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இதே கடையில் பூட்டை உடைத்து செல்போன் திருடப்பட்டுள்ளது. எனவே அந்த சம்பவத்தில் தொடர்புடைய நபருக்கு இதிலும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×