search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை நிலவரம்
    X
    வானிலை நிலவரம்

    தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். வடதமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னை, புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பம். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    வடக்கு வங்கக்கடல், வடமேற்கு வங்கக்கடல் உள்ளிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    Next Story
    ×