search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாக் ஏவுகணை சோதனை
    X
    நாக் ஏவுகணை சோதனை

    பாஜக தேர்தல் அறிக்கை, நாக் ஏவுகணை சோதனை, சமூக வலைதளங்களில் சிம்பு ரீ-என்ட்ரி உள்ளிட்ட முக்கிய செய்திகள்

    பாஜக தேர்தல் அறிக்கை, நாக் ஏவுகணை சோதனை, சமூக வலைதளங்களில் சிம்பு ரீ-என்ட்ரி உள்ளிட்ட முக்கிய செய்திகளை பார்ப்போம்.
    * பீரங்கிகளை தாக்கி அழிக்கக்கூடிய நாக் ஏவுகணையின் இறுதிக்கட்ட சோதனை, ராஜஸ்தான் பாலைவன பகுதியில் இன்று வெற்றிகரமாக நடைபெற்றது.

    * பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

    * 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவை வளர்த்த எனது வாழ்க்கையையும், அரசியல் வாழ்க்கையையும் அழிக்க முயற்சித்தவர் தேவேந்திர பட்னாவிஸ் என்று ஏக்நாத் கட்சே பரபரப்பு குற்றம்சாட்டினார். ஆனால் அவர் சொல்வதில் பாதிதான் உண்மை என்று பட்னாவிஸ் குறிப்பிட்டுள்ளார். ஏக்நாத் கட்சேவுக்கு தன் மீது அதிருப்தி இருந்தால் மூத்த தலைவர்களிடம் புகார் செய்திருக்கலாம் எனவும் பட்னாவிஸ் கூறினார்.

    * லடாக் வளர்ச்சி கவுன்சில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெறுகிறது. 26 உறுப்பினர் பதவிகளுக்கு 94 பேர் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே நேரடி போட்டி நிலவுகிறது. 

    * இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 77 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 55,838 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 1.16 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 68.74 லட்சம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 

    * கொரோனா பாதிப்புக்கான முழு பொறுப்பை பிரதமர் மோடியே ஏற்க வேண்டும் என்று சித்தராமையா கூறினார்.

    * தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான சட்டமன்ற தொகுதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது

    * சூளகிரி அருகே கன்டெய்னர் லாரியை கடத்திச்சென்று ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்களை கொள்ளையடித்த மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் மத்திய பிரதேசம் விரைந்தனர்.

    * தஞ்சை பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது சதயவிழாவை ஒருநாள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    * பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பெரிய ஏரியில் ஏரியில் டைனோசர் முட்டை போல் பெரிய உருண்டை வடிவிலான படிமங்கள் கிடைத்துள்ளன.

    * தீபாவளியையொட்டி வசூல் வேட்டை நடந்த கனிம வளத்துறை துணை இயக்குனரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 100 பவுன் நகை, ரூ.4 லட்சம் சிக்கியது.

    * விலை ஏற்றம் காரணமாக மீண்டும் எகிப்து வெங்காயம் தமிழகத்துக்கு இறக்குமதி ஆகி இருக்கிறது. சுவை இல்லாவிட்டாலும் அதனை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இல்லத்தரசிகள் இருக்கின்றனர்.

    * பிரேசிலில் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீரென உயிரிழந்துள்ளார். எனினும் தடுப்பூசி பரிசோதனையின் பாதுகாப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

    * கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்பே, உலகம் முழுவதும் 35.6 கோடி குழந்தைகள் வறுமையில் வாடி வந்ததாக ஐ.நா. குழந்தைகள் நல அமைப்பு  தெரிவித்துள்ளது. 

    * பஞ்சாப் அணியின் ஒவ்வொரு ஆட்டத்திலும் பரபரப்பான கட்டத்துக்கு நகரும் போது தனது இதயதுடிப்பு எகிறுவதாக கேப்டன் லோகேஷ் ராகுல் கூறியுள்ளார்.

    * விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என்று அவரது தந்தையும் திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியிருக்கிறார்.

    * கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் விலகிய சிம்பு, தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். 
    Next Story
    ×