search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு 80 பேர் குண்டர் சட்டத்தில் கைது

    தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு குற்றங்களில் ஈடுபட்ட 80 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று, திருச்சி மண்டல ஐ.ஜி.ஜெயராமன் கூறினார்.
    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. ஜெயராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கும்பகோணம் கோட்டத்தில் போலீஸ் பற்றாக்குறை இல்லை. குற்றங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் விரைவில் கைது செய்து வருகிறார்கள். திருச்சி மத்திய மண்டலத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபடும் 3400-க்கும் மேற்பட்டவர்களின் குற்ற பின்னணி விவரங்களை சேகரித்து அவர்களின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இதில் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 885 பேரின் குற்ற பின்னணி விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் 80 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    குற்றங்களில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க அனைத்து போலீசாருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாச்சியார்கோவில் அருகே வக்கீல் காமராஜ் தனது நண்பருடன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் வக்கீலின் உறவினர்களே இந்த கொலையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. சொத்துபிரச்சினை காரணமாகவே இந்த கொலை நடைபெற்று உள்ளது. பல போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதால் அவர்கள் நீண்ட விடுப்பில் உள்ளனர். போலீஸ் பற்றாக்குறை உள்ள ஒரு சில இடங்களையும் நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்த வருகிறது. கும்பகோணத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

    இவ்வாறு அவர் கூறினார். 

    பேட்டியின் போது தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஸ்முக் சேகர்சஞ்சய், அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் இருந்தனர்.
    Next Story
    ×