search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கரூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தது- பொதுமக்கள் நிம்மதி

    கரூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
    கரூர்:

    உலகத்தையே ஆட்டிப்படைத்த கொரோனா தொற்று தமிழகத்திலும் வேகமாக பரவியது. கரூர் மாவட்டத்திலும் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கொரோனா பரவல் வேகமாக காணப்பட்டது. தினமும் 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் மொத்த எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்தது.

    தற்போது தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொற்று பரவல் சற்று தணிந்து வருகிறது. இதனால் தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைவிட குறைந்து உள்ளது. அதேசமயம் கரூர் மாவட்டத்திலும் கொரோனாவின் பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மிகவும் குறைந்தே உள்ளது.

    இந்தநிலையில் நேற்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் கரூர் மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி பழைய ரெங்கபாளையத்தை சேர்ந்த 80 வயது முதியவர், திண்ணப்பா நகரை சேர்ந்த 45 வயது ஆண் மற்றும் 40 வயது பெண், அண்ணாநகரை சேர்ந்த 47 வயது பெண் உள்ளிட்ட 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் அனைவரும் கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4-ஆக குறைந்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×