search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குறுங்கோளில் தரையிறங்கிய விண்கலம்
    X
    குறுங்கோளில் தரையிறங்கிய விண்கலம்

    எல்லை தாண்டிய சீன வீரர் ஒப்படைப்பு, குறுங்கோளில் தரையிறங்கிய விண்கலம், மத்திய அரசு விருது உள்ளிட்ட முக்கிய செய்திகள்

    கிலோ 45 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை, எல்லை தாண்டிய சீன வீரர் ஒப்படைப்பு, குறுங்கோளில் தரையிறங்கிய விண்கலம், மத்திய அரசு விருது உள்ளிட்ட முக்கிய செய்திகளை பார்ப்போம்.

    * காவலர் வீரவணக்க நாளையொட்டி டெல்லியில் உள்ள தேசிய காவலர் நினைவுச் சின்னத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    * நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் இருந்து அனைத்து சூழ்நிலைகளிலும் காவலர்கள் சிறப்பான சேவை செய்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    * எல்லை தாண்டி வந்து இந்திய எல்லைக்குள் சுற்றித்திரிந்த சீன வீரர், இந்திய ராணுவத்திடம் சிக்கினார். அவருக்கு தேவையான மருத்துவ உதவி மற்றும் உணவு வழங்கிய இந்திய ராணுவம், பின்னர் அந்த வீரரை உரிய நடைமுறைகளை பின்பற்றி சீன ராணுவத்திடம் ஒப்படைத்துள்ளது. 

    * பீகார் தேர்தல் களத்தில் எதிரும் புதிருமான தலைவர்களான நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ், சிரக் பஸ்வான் ஆகியோர், ராம்விலாஸ் பஸ்வான் நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஒன்று சேர்ந்து அமர்ந்திருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

    * பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி, மின்சார கட்டண தள்ளுபடி மற்றும் நீர்ப்பாசன வசதிகளை அதிகரிப்பது, மத்திய அரசின் வேளாண் சட்டங்களை நிராகரிப்பதற்கான விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 

    * இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 76.5 லட்சமாக அதிகரித்துள்ளது. 67.9 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 7.40 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

    * மும்பையில் சிகிச்சை மையத்தில் கொரோனா நோயாளிகள் கர்பா நடனமாடிய வீடியோ சமூகவலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    * பெரிய வெங்காய விலை உயர்ந்து வரும் நிலையில், சென்னையில் உள்ள பண்ணை பசுமை கடைகளில் 45 ரூபாய்க்கு ஒரு கிலோ வெங்காயம் விற்பனை  செய்யப்படுகிறது. வெங்காய விற்பனையை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

    * புதுச்சேரியில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்கான மானியத் தொகைக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி ஒப்புதல் அளித்துள்ளார்.

    * காவலர் வீரவணக்க நாளான இன்று சென்னையில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தில் உள்ள நினைவு சின்னத்தில் டிஜிபி திரிபாதி மரியாதை செலுத்தினார்.

    * அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான ‘நீட்’ தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 1-ந் தேதி முதல் தொடங்கும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்து இருக்கிறது.

    * சென்னை தி.நகரில் உள்ள நகைக்கடையின் பூட்டை உடைத்து, ரூ.2கோடி மதிப்பிலான நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    * அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், பிரசாரத்தின் போது பெய்த மழையில் நடனமாடினார் கமலா ஹாரிஸ். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    * குறுங்கோள் பென்னுவை ஆய்வு செய்வதற்காக நாசா அனுப்பிய விண்கலம் ஓசிரிஸ்-ரெக்ஸ், 4 ஆண்டு பயணத்திற்கு பிறகு குறுங்கோளில் தரையிறங்கியது.  அதில் உள்ள இயந்திரக் கரங்கள் குறுங்கோளை துளையிட்டு பாறைத் துகள்களை எடுக்கத் தொடங்கியது.

    * ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்து இரு சதங்களை விளாசி ஷிகர் தவான் புதிய சாதனை படைத்துள்ளார்.

    * பார்த்திபன் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படத்திற்கும், லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஹவுஸ் ஓனர் திரைப்படத்திற்கும் மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×