
பழனி அருகே கொடைக்கானல் ரோட்டில் தேக்கம்தோட்டம் என்ற பகுதியில் நடிகர் மாதவனுக்கு சொந்தமாக பண்ணை வீடு, தோட்டம் இருந்தது. இந்நிலையில் அந்த தோட்டத்தை விற்பது தொடர்பாக பழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நேற்று காலையில் மாதவன் வந்தார்.
அங்கு ஆவணங்களில் கையெழுத்திடுவதற்காக சுமார் அரைமணி நேரம் இருந்தார். பின்னர் அவர் தனது காரில் ஏறி அங்கிருந்து சென்றுவிட்டார். நடிகர் மாதவன் பழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்ததை கண்ட ரசிகர்கள் பலர் அவருடன் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்.