search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறப்பு ரெயில்
    X
    சிறப்பு ரெயில்

    தூத்துக்குடியில் இருந்து மதுரை வழியாக மைசூருக்கு சிறப்பு ரெயில்

    தூத்துக்குடியில் இருந்து மதுரை வழியாக மைசூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
    மதுரை:

    மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் இருந்து மைசூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, தூத்துக்குடியில் இருந்து மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கமான நேரத்துக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வ.எண் 06236 மைசூரு-தூத்துக்குடி சிறப்பு ரெயில் மைசூருவில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 11.15 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும். இந்த ரெயில் வருகிற 23-ந் தேதி முதல் அடுத்த மாதம் 30-ந் தேதி வரை இயக்கப்படும்.

    மறுமார்க்கத்தில் வண்டி எண் 06235 தூத்துக்குடி- மைசூரு சிறப்பு ரெயில் தூத்துக்குடியில் இருந்து மாலை 4.25-க்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.55 மணிக்கு மைசூரு சென்று சேரும்.

    இந்த ரெயில் வருகிற 24-ந் தேதி முதல் வருகிற டிசம்பர் 1-ந் தேதி வரை இயக்கப்படும். இந்த ரெயில்களில் ஒரு குளிரூட்டப்பட்ட, 2 அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 மூன்று அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், பன்னிரென்டாம் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 இரண்டு வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்படும்.

    இந்த ரெயில் வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைரோடு, திண்டுக்கல், கரூர், புகளூர், கொடுமுடி, ஈரோடு, சேலம், தர்மபுரி, பாலக்கோடு, ஓசூர், காரமேலரம், பெங்களூரு கிழக்கு, பெங்களூரு கண்டோன்மெண்ட், பெங்களூரு சிட்டி, கெங்கேரி, பிடாடி, ராமநகரம், சென்னப்பட்டினா, மட்டூர், மண்டியா, பாண்டவபுரா ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    Next Story
    ×