search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அதிநவீன ரோந்து படகில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதை காணலாம்
    X
    கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அதிநவீன ரோந்து படகில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதை காணலாம்

    கன்னியாகுமரி கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை

    கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சார்பில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
    கன்னியாகுமரி:

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரியில் இந்திய பெருங்கடல், அரபிக்கடல், வங்கக்கடல் ஆகிய 3 கடல்களும் சங்கமிக்கின்றன. மேலும் கன்னியாகுமரி இலங்கைக்கு மிக அருகாமையில் இருக்கிறது. இதனால் கன்னியாகுமரி கடல்வழியாக தீவிரவாதிகள் ஊடுருவும் அபாயம் உள்ளது. அதுபோல் கன்னியாகுமரி கடல் வழியாக மண்எண்ணெய், டீசல் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதும் நடக்கின்றன.

    அவ்வாறு தீவிரவாதிகள் ஊடுருவல் மற்றும் சட்டவிரோத செயல்கள் உள்ளிட்டவைகளை தடுக்கும் விதமாக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் மாதந்தோறும் சஜாக் ஆபரேஷன் என்ற பாதுகாப்பு ஒத்திகையிலும் ஈடுபடுகின்றனர்.

    அந்த வகையில் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாரின் சஜாக் ஆபரேஷன் நேற்று நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த பாதுகாப்பு ஒத்திகை மாலை 6 மணி வரை நடந்தது. கடல் பகுதிகளில் அதிநவீன ரோந்து படகில் சென்றும் கடற்கரை பகுதிகளில் மணலில் ஓடக்கூடிய நவீன ரோந்து வாகனத்திலும் சென்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், சுடலைமணி, சுரேஷ் மற்றும் போலீசார் சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து அதிநவீன ரோந்து படகில் புறப்பட்டு சென்றனர். அவர்கள் கிழக்கு கடல்பகுதியான நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின்நிலைய கடல் பகுதி வரை ரோந்து படகில் சென்று கண்காணித்தனர்.

    மேலும் கன்னியாகுமரி முதல் நீரோடி வரையிலான மேற்கு கடற்கரை பகுதியிலும் ரோந்து சென்றனர். குமரி மாவட்டத்தில் 72 கிலோ மீட்டர் தூரம் உள்ள கடற்கரை பகுதியில் அமைந்துள்ள 48 கடற்கரை கிராமங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கடற்கரை கிராமங்களில் உள்ள 9 சோதனை சாவடிகளிலும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×