search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    இடி, மின்னலின்போது டி.வி., தொலைபேசிகளை பயன்படுத்தக்கூடாது - மின்வாரிய செயற்பொறியாளர் அறிவுறுத்தல்

    இடி, மின்னலின்போது டி.வி., தொலைபேசிகளை பயன்படுத்தக்கூடாது என்று நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் அறிவுறுத்தி உள்ளார்.
    நாமக்கல்:

    நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் (இயக்கம்-பராமரிப்பு) சபாநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் மழை காலத்தில் மின் விபத்துகளில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மின்கம்பம் மற்றும் அதன் ஸ்டே வயரின் மீது கொடிக்கயிறு கட்டி துணி காய வைக்கக்கூடாது. மின்கம்பத்திலோ, அவற்றை தாங்கும் கம்பிகளிலோ, பந்தல், கால் நடைகள் மற்றும் விளம்பர பலகைகள் கட்டக்கூடாது. அறுந்து விழுந்த மின்சார கம்பிகளின் அருகில் செல்லாமல் உடன் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.

    மின்சார கம்பிகளுக்கு அருகில் கட்டிடங்களை கட்டும்போது போதுமான இடைவெளி விட்டு கட்ட வேண்டும். மேலும் மின்மாற்றிற்கு அருகிலோ, மின்கம்பிக்கு அருகிலோ எந்த காரணத்தை கொண்டும் செல்லக்கூடாது. இடி, மின்னலின்போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைபேசி உள்ளிட்ட மின்சாதன பொருட்களை பயன்படுத்தக்கூடாது. மின்கட்டமைப்புகளை உடனுக்குடன் சீர்செய்து பழுதின்றி பாதுகாப்புடன் பராமரித்தல் வேண்டும்.

    ஒவ்வொரு மின் இணைப்புகளிலும் அங்கீகரிக்கப்பட்ட மின் ஒப்பந்ததாரர்களை கொண்டு மின்வயரில் பணிகளை செய்ய வேண்டும். ஒவ்வொரு மின் இணைப்புகளிலும் இ.எல்.சி.பி. கருவியை பொருத்த வேண்டும். நிரந்தர நில இணைப்புகளையும் ஏற்படுத்த வேண்டும். மின்மாற்றிகளை தன்னிச்சையாக இயக்க கூடாது. இயக்க ஊக்குவிக்கவும் கூடாது.

    மின் உபகரணங்களை உபயோகப்படுத்தும்போது மிகவும் ஜாக்கிரதையாக பாதுகாப்புடன் கையாள வேண்டும். தங்கள் சார்ந்த பகுதிகளில் உள்ள மின்பாதைகளில் செடி, கொடி, மரங்கள் குறுக்கிட்டால், உடனடியாக அதனை மின்வாரிய பணியாளர்களுக்கு தெரிவித்து முற்றிலுமாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×