search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - ஆணையாளர் அறிவுறுத்தல்

    கோவையில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தி உள்ளார்.
    கோவை:

    கோவையில் குடிநீர் வினியோகம், பாதாள சாக்கடை, சாலைப்பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பண்டியன் தலைமை தாங்கினார்.

    அப்போது அவர், தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட குனியமுத்தூர், கோவைப்புதூரில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள், குடிநீர் இணைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதில் தெற்கு மண்டல உதவி ஆணையாளர் டி.ஆர்.ரவி, செயற்பொறியாளர் ஞானவேல், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் ரகுபதி, நிர்வாக பொறியாளர் லட்சுமணன், ஆலோசகர் சம்பத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    முன்னதாக, 91-வது வார்டு கிறிஸ்தவ சமுதாயத்தினருக்கான மயானம் அமைப்பதற்கான இடத்தை ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அத்துடன் அவர், கோவைப்புதூர் அசோக்நகரில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள், சிறுவாணி நகரில் சாலைப்பணிகள் நடைபெற்று வருவதையும், அரசு ஊழியர் காலனியில் பாதாள சாக்கடைக்காக குழி தோண்டிய போது பழுதடைந்த குடிநீர் குழாய் இணைப்புகளை சரிசெய்யும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

    அதைத்தொடர்ந்து அவர், அங்கு இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி, கொரோனா பரிசோதனை பணி மற்றும் தொண்டாமுத்தூர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சுகளிடம் கொரோனா பரிசோதனைக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார். மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தூய்மை பணியாளர்களை கொண்டு காலை, மாலை நேரங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும், அங்கு வசிப்பவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆணையாளர் உத்தரவிட்டார்.

    இதையடுத்து அவர், 87- வது வார்டு பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை நீர் உந்துநிலையம் கட்டுமான பணிகள், சுகுணாபுரம் மேற்கு இட்டேரி வீதியில் சமுதாய கூடம் கட்டப்பட்டு வரும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்களை சீரமைத்து மேம்படுத்துதல், பூங்காக்கள் அமைக்கும் பணி, பாதாள சாக்கடை, மாதிரி சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார். கோவை நகரில் சீரான குடிநீர் வினியோகம், பாதாள சாக்கடை திட்டத்தில் கழிவுநீர் வெளியேற்றப்படும் முறைகள் குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் ரூ.24 கோடியே 36 லட்சத்தில் மாதிரி சாலை மற்றும் அதில் வடிகால் அமைக்கும் பணிகளை அவர், நேரில் ஆய்வு செய்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
    Next Story
    ×