search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    15 அடி ஆழ பள்ளத்தில் லோடு வேன் கவிழ்ந்து கிடப்பதை படத்தில் காணலாம்.
    X
    15 அடி ஆழ பள்ளத்தில் லோடு வேன் கவிழ்ந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

    தஞ்சை அருகே 15 அடி ஆழ பள்ளத்தில் வேன் பாய்ந்தது- டிரைவர் உள்பட 3 பேர் உயிர் தப்பினர்

    தஞ்சை அருகே 15 அடி ஆழ பள்ளத்தில் வேன் பாய்ந்தது. இதில் டிரைவர் உள்பட 3 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
    கள்ளப்பெரம்பூர்:

    தஞ்சை- புதுக்கோட்டை சாலையில் உள்ள திருக்கானூர்ப்பட்டி 4 ரோடு சந்திப்பு அருகே மதுரையில் இருந்து தஞ்சை நோக்கி மரம் ஏற்றி செல்ல ஒரு லோடு வேன் நேற்று அதிகாலை 4 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. வேனை மதுரையை சேர்ந்த அய்யனார்(வயது35) என்பவர் ஓட்டி வந்தார். வேனில் டிரைவருடன் மேலும் 2 பேர் இருந்தனர். திருக்கானூர்பட்டி தனியார் வாகன எடைமேடை அருகே

    வேன் வந்து கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் அருகே இருந்த 15 அடி ஆழ பள்ளத்தில் பாய்ந்து பள்ளத்தில் இருந்த மின்கம்பம் மீது மோதியது.

    வேன் மோதிய வேகத்தில் மின்கம்பத்தில் இருந்த மின்கம்பிகள் அறுந்து அருகே இருந்த வயலில் விழுந்தது. பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த வேனில் இருந்தவர்கள் எழுப்பிய சத்தத்தை அந்த பகுதி வழியாக சென்ற மக்கள் கேட்டனர். உடனே அவர்கள் பள்ளத்தில் இறங்கி வேனில் இருந்தவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதனால் வேனில் இருந்த 3 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இது குறித்த தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அறுந்து கிடந்த மின்கம்பிகளை சீரமைத்தனர்.
    Next Story
    ×