search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழங்கள்
    X
    பழங்கள்

    நாமக்கல் உழவர் சந்தையில் ரூ.4½ லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை

    நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று 11 டன் காய்கறி மற்றும் பழங்கள் ரூ.4½ லட்சத்துக்கு விற்பனையானது.
    நாமக்கல்:

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாமக்கல் உழவர் சந்தை 5 மாதங்களாக மூடப்பட்டு உள்ளது. இங்கு செயல்பட்டு வந்த கடைகள் நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகின்றன.

    இங்கு நேற்று 8 டன் காய்கறிகள் மற்றும் 3 டன் பழங்கள் விற்பனைக்கு வந்திருந்தன. இவை ரூ.4 லட்சத்து 56 ஆயிரத்து 590-க்கு விற்பனை செய்யப்பட்டன. இவற்றை 1,200 பேர் வாங்கி சென்றனர்.

    இந்த கடைகளில் தக்காளி கிலோ ரூ.22-க்கும், கத்தரி கிலோ ரூ.48-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.24-க்கும், புடலங்காய் கிலோ ரூ.24-க்கும், பீர்க்கன் கிலோ ரூ.32-க்கும், கேரட் கிலோ ரூ.96-க்கும், பீட்ரூட் கிலோ ரூ.50-க்கும், பீன்ஸ் கிலோ ரூ.52-க்கும், இஞ்சி கிலோ ரூ.120-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

    சின்ன வெங்காயம் கிலோ ரூ.70-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.65-க்கும் விற்பனை செய்யப்பட்டன. கடந்த வாரம் சின்ன வெங்காயம் கிலோ ரூ.65-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஐப்பசி மாதம் என்பதால் காய்கறிகளின் வரத்து அதிகரித்து இருப்பதாகவும், அவற்றின் விலை சற்று குறைந்து இருப்பதாகவும் உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×