என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  தஞ்சை மாவட்டத்தில் மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் - மீன்வளத்துறை உதவி இயக்குனர் தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தஞ்சை மாவட்டத்தில் மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டத்தை மீனவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அதிகாரி தெரிவித்துள்ளார்.
  சேதுபாவாசத்திரம்:

  தமிழகத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு மற்றும் கடல் மீனவர்கள் மீனவ மகளிர் கூட்டுறவு சங்கங்கள் சார்ந்த மீனவர்களுக்கு மத்திய அரசின் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் 25 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட வீட்டை ரூ 1.70 லட்சம் மதிப்பில் இலவச கட்ட அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்காக உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி பயனாளிகளை தேர்வு செய்ய ஆணை 
  பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயனாளிகள் மீன்வளத்துறை மூலம் தேர்வு செய்து ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்நாட்டு கடல் மீனவர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள மீனவர்கள் இத்திட்டத்தில் பெறலாம்.

  பயனாளிகள் உரிய நில ஆவணங்களுடன் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அனுகலாம். இது குறித்து மேலும் விவரங்களுக்கு தஞ்சை மாவட்ட மீனவர்கள் மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகம், எண்: 87¾, அறிஞர் அண்ணா சாலை, கீழவாசல், தஞ்சாவூர் என்ற முகவரியில் செயல்படும் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அல்லது 04362-235389 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
  Next Story
  ×