search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் பசுபதிபாளையத்தில் பூட்டி கிடக்கும் மின்மயானத்தை காணலாம்
    X
    கரூர் பசுபதிபாளையத்தில் பூட்டி கிடக்கும் மின்மயானத்தை காணலாம்

    கரூர் பசுபதிபாளையத்தில் பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் மின்மயானம்

    கரூர் பசுபதிபாளையத்தில் ரூ.50 லட்சம் செலவில் கட்டப்பட்ட மின்மயானம் பல ஆண்டுகளாக பூட்டியே உள்ளது.
    கரூர்:

    கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம் வடக்குத்தெருவில் ரூ.50 லட்சம் மதிப்பில் நவீன மின்மயனம் அமைக்க கடந்த 2007-ம் பூமி பூஜையிட்டு, பணிகள் தொடர்ந்து நடைபெற்று கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த நவீன மின்மயானம் செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. பசுபதிபாளையம், தாந்தோன்றிமலை, சுங்ககேட் மற்றும் காந்திகிராமம் ஆகிய பகுதியை சேர்ந்தவர்கள் இதனை பயன்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்டது.

    பசுபதிபாளையத்துக்கும், வடக்கு தெருவுக்கும் இடையே கரூர்-திருச்சி தண்டவாள பாதை அமைக்கும் பணி நடைபெற்றது. இதனால் அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் இந்த மின்மாயனத்துக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

    மேலும் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் இடத்தின் அருகில் மின்மாயனம் உள்ளது. மேலும், பல்வேறு காரணங்களால் இந்த மின்மயானம் செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. தற்போது பசுபதிபாளையம் வடக்கு தெரு பகுதியில் கடந்த 1 ஆண்டிற்கும் மேலாக குகைவழிப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று முடிந்தது. இதனால் இந்த மின்மயானம் கட்டப்பட்டு பல ஆண்டுகளை கடந்தும் செயல்படாமல் இருப்பதால் தற்போது மது பிரியர்களின் கூடாரமாக மாறி இருப்பதாக கூறப்படுகிறது.

    மேலும் இந்த மின்மாயனத்திற்கு செல்லும் வழியில் இருபுறங்களிலும் முட்புதர்களாக காட்சியளிக்கிறது. ரூ.50 லட்சம் செலவில் கட்டப்பட்ட இந்த மின்மயானம் போதிய பராமரிப்பு இன்றி செயல்படாமல் அப்படியே கிடக்கிறது. எனவே இந்த மின்மயானம் செயல்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×