search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்யபிரத சாகு
    X
    சத்யபிரத சாகு

    புதிதாக பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கான தேர்தல் நிர்வாக உள்கட்டமைப்பு வசதி உருவாக்கம்- சத்யபிரத சாகு தகவல்

    புதிதாக பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கான தேர்தல் நிர்வாக உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.
    சென்னை:

    தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழகத்தில் விழுப்புரம், நெல்லை, காஞ்சீபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு முறையே கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

    இந்த மாவட்டங்களில் தேர்தல் நிர்வாக வசதிக்காக தனி உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, மின்னணு தகவல் தரவு மையம் ஆகியவற்றை பராமரிக்க முடியும். மேலும் தனி தேர்தல் பிரிவு அந்த புதிய மாவட்டங்களில் உருவாக்கப்பட்டுள்ளன.

    அதன்படி கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய புதிய மாவட்ட கலெக்டர்கள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகளாக நியமனம் பெற்றுள்ளனர். இதற்கான அறிவிப்பாணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பாணை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×