search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி
    X
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி

    முத்துப்பேட்டையில் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கோரிக்கை

    முத்துப்பேட்டையில் கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள ஆஸ்பத்திரி சாலையில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த சாலை சில ஆண்டுகளாக பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. இதையடுத்து பேரூராட்சி சார்பில் சாலை சீரமைக்கும் பணிகள் கடந்த மாதம் தொடங்கியது. தற்போது ஜல்லிகள் பரப்பி விடப்பட்ட நிலையில் சாலை பணி திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது.

    ஜல்லிகள் மட்டம் செய்யப்படாத நிலையில் உள்ளதால் அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் சாலையில் செல்லமுடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த சாலை பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பேரூராட்சி சார்பில் தூய்மை பணிகளும் முடங்கி உள்ளது.

    இதனால் சாலைகளில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இந்த குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும். சாலையில் தேங்கி உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். சாலை பணியை துவங்கி விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், நகர செயலாளர் செல்லத்துரை ஆகியோர் கூறுகையில்,

    கடந்த ஒரு மாதமாக இந்த சாலை பணி முடங்கி உள்ளதால் இப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். குப்பைகளும் ஆங்காங்கே தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றனர்.
    Next Story
    ×