search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைமைச் செயலகம்
    X
    தலைமைச் செயலகம்

    ஆளுநர் முடிவு வரும் வரை மருத்துவ கலந்தாய்வு தொடர்பாக எந்த முடிவும் வெளியிடப்படாது -அரசு தகவல்

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கும்படி ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    மதுரை:

    நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது என்றும், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி ஆளுருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும், காலக்கெடு விதிக்க முடியாது என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

    நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர், கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை பற்றிய விவரத்தை அரசு எப்போது வெளியிடும்? என கேட்ட நீதிபதிகள், இதுபற்றி தமிழக அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்கும்படி தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.

    இதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், ஆளுநர் முடிவு வரும் வரை மருத்துவ கலந்தாய்வு தொடர்பாக எந்த முடிவும் வெளியிடப்படாது என்றார்.
    Next Story
    ×