
கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 28). கூலித்தொழிலாளி. இவர், 14 வயதான பிளஸ்-1 மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றார்.
பின்னர் அவரை, சுருளி அருவி பகுதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர், ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அவர்களை தேடி வந்தனர்.
இந்தநிலையில் விஷ்ணு, பிளஸ்-1 மாணவியுடன் திருப்பூரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று 2 பேரையும் பிடித்தனர்.
பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விஷ்ணுவை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மாணவி, காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.