search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினிகாந்த்
    X
    ரஜினிகாந்த்

    அனுபவமே பாடம்... ராகவேந்திரா மண்டப சொத்து வரி வழக்கு பற்றி ரஜினி கருத்து

    ராகவேந்திரா திருமண மண்டப சொத்து வரி நிலுவை தொடர்பான வழக்கை திரும்ப பெற்ற நிலையில், இதுபற்றி நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சொத்து வரியாக நிலுவையில் உள்ள ரூ.6.50 லட்சத்தை செலுத்தும்படி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி ராகவேந்திரா திருமண மண்டப உரிமையாளரான நடிகர் ரஜினிகாந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

    வழக்கு விசாரணையின்போது, ரஜினிகாந்த் தரப்புக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார். சொத்து வரி நோட்டீசுக்கு மாநகராட்சியில் மேல்முறையீடு செய்யாமல் உடனடியாக வழக்கு தொடர்ந்து நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதாக நீதிபதி கூறினார். இதனையடுத்து ரஜினிகாந்த் தனது மனுவை திரும்ப பெறுவதாக அறிவித்தார். இதற்கான மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 

    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    ராகவேந்திரா மண்டப சொத்து வரி...
    நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். 
    தவறைத் தவிர்த்திருக்கலாம்.
    #அனுபவமே_பாடம்

    இவ்வாறு ரஜினி கூறி உள்ளார்.
    Next Story
    ×