search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலாம் நினைவிடம்
    X
    கலாம் நினைவிடம்

    நாளை 89-வது பிறந்தநாள் : ராமேசுவரத்தில் கலாம் நினைவிடத்துக்கு செல்ல பார்வையாளர்களுக்கு தடை

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் கலாமின் நினைவிடத்திற்கு பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ராமேசுவரம்:

    மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கடந்த 2015-ம் ஆண்டு மரணம் அடைந்தார். அவரது உடலானது அவரது சொந்த ஊரான ராமேசுவரம் அருகே பேய்க்கரும்பு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அப்துல்கலாம் நினைவிடத்தில் மத்திய அரசின் பாதுகாப்பு, ஆராய்ச்சி மேம்பாட்டு துறையின் சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. அந்த மணிமண்டபத்தில் கலாமின் சாதனைகள் அடங்கிய அரிய புகைப்படங்கள், அவரது கண்டுபிடிப்புகள் பற்றிய பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அப்துல்கலாம் மணிமண்டபத்தை காண ஏராளாமானவர்கள் வருகின்றனர்.

    இந்தநிலையில் அப்துல்கலாமின் 89-வது பிறந்தநாள் நாளை(வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மணிமண்டபம் பல வண்ண மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு பிரகாசமாக ஜொலிக்கிறது. கலாமின் பிறந்த நாளான நாளை காலை 10 மணிக்கு கலாமின் குடும்பத்தினர் கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி சிறப்பு பிரார்த்தனையும் நடத்துகின்றனர். ஆனால் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் கலாமின் நினைவிடத்திற்கு பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×