search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீட்பு
    X
    மீட்பு

    வீட்டை விட்டு வெளியேறிய புதுக்கோட்டை சிறுவன் அவினாசியில் மீட்பு

    பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய புதுக்கோட்டை சிறுவன் அவினாசியில் மீட்கப்பட்டான்.
    திருப்பூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் காந்திநகர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் 10-ம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, வீட்டில் இருந்து வந்ததாக தெரிகிறது. பள்ளி படிப்பை நிறுத்தியதால், தினேசை அவரது பெற்றோர் திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த தினேஷ் நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து வெளியேறி, ஊட்டியில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு பஸ்சில் வந்துள்ளான். இந்நிலையில் கோவைக்கு நேற்று முன்தினம் இரவு வந்ததும் சிறுவனிடம் இருந்த பணம் அனைத்தும் செலவழிந்து விட்டது. இதனால் செய்வதறியாது திகைத்த சிறுவன், அங்கிருந்து நடந்து நேற்றுகாலை அவினாசிக்கு வந்துள்ளான். அப்போது அந்த வழியாக வந்த சைல்டு லைன் அமைப்பின் நிர்வாகி ஒருவர் சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி லிப்ட் கேட்டுள்ளார். தொடர்ந்து அந்த நிர்வாகி, சிறுவனிடம் விசாரணை நடத்தியதில் மேற்கண்ட தகவல்களை தெரிவித்துள்ளார். தொடர்ந்து அந்த சிறுவனை மீட்ட சைல்டு லைன் அமைப்பினர் உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தனர். மேலும், பெரியார் காலனியில் உள்ள ஒரு தனியார் அமைப்பின் விடுதியில் தங்க வைத்துள்ளனர்.

    தற்போது அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிறுவனை அழைத்து செல்ல திருப்பூருக்கு வருகை தர இருக்கிறார்கள். சிறுவன் இன்று (செவ்வாய்க்கிழமை) பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுகிறான். இதுபோன்று வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என சிறுவனுக்கு அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×