search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை கலெக்டர்
    X
    நெல்லை கலெக்டர்

    சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் ஷில்பா தகவல்

    சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார்.
    நெல்லை:

    தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தைச் சேர்ந்தவர்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2020-2021 கல்வி ஆண்டில் 1 முதல் 10-ம்வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

    11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி படிப்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட உள்ளது. இதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    2020-2021 கல்வி ஆண்டில் தமிழகத்தில் மேற்படிப்பு கல்வி உதவிக்கான திட்டங்களின் கீழ் 1 லட்சத்து 35 ஆயிரத்து 127 மாணவ-மாணவிகளுக்கு புதிய கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த கல்வி உதவித்தொகை மாணவ- மாணவிகளின் வங்கி கணக்கில் மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்படும்.

    இந்த கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியான மாணவ-மாணவிகள் வருகிற 31-ந் தேதி வரையிலும் மேற்படி இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவ-மாணவிகளின் ஆதார் எண்கள், விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் அலுவலர்களுக்கு இணையதளத்தில் பகிரப்பட மாட்டாது. மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகைக்கு இணையதளத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள் தங்களின் கல்வி நிலையத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் விவரங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் ஒப்புதல் பெற்ற பின்னரே விண்ணப்பங்களை இணையத்தில் சரிபார்க்க இயலும்.

    புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ-மாணவிகள் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய குறியீட்டு எண்ணை மாணவ-மாணவிகளுக்கு தெரிவிக்க வேண்டும். மத்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் http://www.minorityaffairs.gov.in/schemes என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×