search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரத்தில் நவாஸ்கனி எம்.பி.தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தபோது எடுத்தபடம்.
    X
    ராமநாதபுரத்தில் நவாஸ்கனி எம்.பி.தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தபோது எடுத்தபடம்.

    அரசின் மீதான வெறுப்பு தேர்தலில் வெளிப்படும்- நவாஸ்கனி எம்.பி.

    அ.தி.மு.க. தலைமையிலான தமிழக அரசின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த வெறுப்பு வரும் சட்டமன்ற தேர்தலில் வெளிப்படும் என்று நவாஸ்கனி எம்.பி. தெரிவித்தார்.
    ராமநாதபுரம்:

    உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், அதற்கு ஆறுதல் கூறச்சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்காகாந்தி ஆகியோர் மீது நடந்த தாக்குதலை கண்டித்தும் ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் சந்தைத்திடல் பகுதியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கட்சியின் மாவட்ட தலைவர் வருசை முகம்மது தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜகான், மாநில மாணவரணி துணை செயலாளர் சிராஜ்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். நிகழ்ச்சியில், மாநில ஊடக பிரிவு செயலாளர் அப்துல்ஜப்பார், மருத்துவ அணி செயலாளர் பாக்கர், நகர் நிர்வாகி அன்சாரி, சுதந்திர தொழிலாளர் யூனியன் மாவட்ட பொருளாளர் செய்யது இப்ராகிம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதன்பின்னர் நவாஸ்கனி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:- சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடனும் பா.ஜ.க. கூட்டணி அமையலாம் என்று பா.ஜ.க.வை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ள கருத்திற்கு தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் அதற்கு வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

    மதவாத கட்சியான பா.ஜ.க.வை கடுமையாக தி.மு.க. எதிர்த்து வருகிறது. அதனால் அவர்களுடன் கூட்டணிக்கு வாய்ப்பு நிச்சயம் இல்லை. மேலும், திராவிட கொள்கைகளை ஏற்றுக்கொண்டு பா.ஜ.க. கூட்டணி வைப்பதற்கான வாய்ப்பு கொஞ்சம்கூட இல்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கடந்த தேர்தலில் மதசார்பற்ற தி.மு.க. கூட்டணிக்கு முழுமையான வெற்றி கிடைத்துள்ளது.

    தற்போது நடந்து கொண்டிருக்கும் அ.தி.மு.க. ஆட்சி மீது மக்கள் மிகுந்த வெறுப்பில் உள்ளனர். இந்த வெறுப்பு வரும் சட்டமன்ற தேர்தலில் வெளிப்படும். அதன் மூலம் தி.மு.க. தலைமையிலான ஆட்சி நிச்சயம் அமையும். இனி ஜெயிக்க போவதில்லை, ஆட்சி அமைக்க போவதில்லை என்ற நிலையில் அ.தி.மு.க.வில் யாரை முதல்-அமைச்சராக அறிவித்து என்ன ஆகிவிடபோகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×